திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் லீலையானது ஆண்டுக்கு இருமுறை நடைபெறும், ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தின் போது ஒன்றும், பங்குனி பெருவிழாவை முன்னிட்டும் இரண்டாவது முறையாக சூரசம்ஹாரம் என திருப்பரங்குன்றத்தில் 2 சூரசம்ஹாரம்லீலை நடைபெறுவது வழக்கம்.

கடந்த 5-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழாவானது 15 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தினமும் தங்க குதிரை வாகனம், தங்கமயில் வாரணம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க பல்லாக்கு, வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முக்கிய நிகழ்வான வெள்ளி யானை வாகனத்தில் கடந்த 11 -ஆம் தேதி கைப்பாரம் தூக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து., 10 ஆம் நாளான இன்று சுரசம்ஹார லீலையானது மாலை 7 மணிக்கு நடைபெற்றது. இதை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர், முன்னதாக சுப்ரமணியசுவாமி தங்க மயில் வாகனத்தில் தெய்வானை அம்மனுடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தனர்.

தொடர்ந்து., சன்னதி தெருவில் அமைத்துள்ள சொக்கநாதர் கோவில் முன்பு கோவில் பட்டர் வீரபாகு சுவாமியிடமிருந்து சுரசம்ஹார லீலையை காண வந்த பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்., அதனை தொடர்ந்து சுரசம்ஹார லீலையானது நடைபெற்றது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதி தெருவில் நின்று கண்டு மகிழ்ந்தனர். நாளை பங்குனி திருவிழாக்களான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 -ம்தேதி சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை திருக்கல்யாணம் வைபோகமும்., உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.