ஆட்டோ ஓட்டுனர் மனைவியுடன் பாஜக பிரமுகரின் கள்ள காதலால் தூக்கு இட்டு கணவன் தற்கொலை பாஜக பிரமுகர் கைது செய்தனர்.
ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்ததுடன் டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
அருமனை அருகே பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் என்ற அனிகுட்டன் (48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தன்யா என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கிளை செயலாளர் மதுக்குமார் என்பவர் முத்தம் கொடுத்ததை அனி குட்டன் நேரில் பார்த்தது அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் மதுக்குமார் அனிகுட்டனை வாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மதுகுமாரை கைது செய்தனர். ஜாமீனில் வந்த மது குமாருக்கும் தன்யாவுக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த அனிகுட்டன் மனைவியை கம்பியால் சரமாரியாக தாக்கினார். மனைவி இறந்துவிட்டார் என்று எண்ணி அனிகுட்டன் வீட்டில் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் தன்யா கேரள மாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறுகாணி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு மதுக்குமாரை கைது செய்தனர்.
மதுக்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். பாஜக பிரமுகர் கைது கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை குமரி மாவட்டம் முழுவதும், மக்கள் மத்தியில் ஒரு பேசும் பொருளாக பரவிவருகிறது.