ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகளிர் அணி மாநில செயலாளர் கௌசல்யா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.