• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருவிழா நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை

ByP.Thangapandi

Mar 6, 2025

உசிலம்பட்டி அருகே கோவிலில் சிலை வைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையை சரி செய்து விரைவில் கோவில் திருவிழா நடத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி இந்து அமைப்பினர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள இ.பெருமாள்பட்டியில் அமைந்துள்ளது சந்தன மாரியம்மன் கோவில, இந்த கோவிலின் புரணமைப்பு பணிகள் செய்யப்பட்டு சிலை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த சிலை வைப்பதில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரச்சனை உருவாகி கோவில் திருவிழா நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இடையூறாக உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கோவில் திருவிழா நடத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட துணை தலைவர் சுந்தர மூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் எழுமலை காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள சூழலில் கிராமப்புற மக்கள் நோய் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு வேண்டுதல்களை வைத்து திருவிழாவிற்காக காத்திருப்பதாகவும், கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விரைவில் திருவிழா நடத்த வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.