• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

Byவிஷா

Feb 26, 2025

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரோடா வங்கி தேசிய அளவில் 4,000 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 223 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களை பார்க்கலாம் – சென்னை – 90, கோயம்புத்தூர் – 20, மதுரை – 10, திருச்சி – 7, சேலம் – 6, திருவள்ளூர் – 13, வேலூர் – 9 மற்றும் மற்ற மாவட்டங்களிலும் பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை :
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு (தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும்), மருத்துவ பரிசோதனை ஆகியவை தேர்வு முறையாகும். உதவித்தொகை விவரங்கள் – மெட்ரோஃநகர்புற கிளைகள் – ரூ.15,000/-, புறநகர்ஃகிராமப்புற கிளைகள் – ரூ.12,000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : முதலில் NATS (https://nats.education.gov.in) அல்லது NAPS (https://www.apprenticeshipindia.gov.in) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பரோடா வங்கி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் – பொது, ஓபிசி – ரூ.800, எஸ்.சி / எஸ்.டி, பெண்கள் – ரூ.600, மாற்றுத்திறனாளிகள் – ரூ.400.

கடைசி நாள் – 11.03.2025, எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.