இந்தியாவில் டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதோடு, மேலும் பல சலுகைகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 2 லட்சம் மின்சார வாகன விற்பனையை தாண்டியுள்ளது. அதனை கொண்டாடும் வகையில் 45 நாட்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.50,000 வரை எக்சேஞ்ச் போனஸ், ஜீரோ டௌன் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி முழு தொகையையும் கடனாக பெற்று டாடா மின்சார கார் வாங்குதல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.
Tata Nexon EV, Tata Curvv EV வாங்குபவர்கள் டாடா பவரின் சார்ஜிங் நெட்வொர்க்கிற்கான 6 மாத இலவச காம்ப்ளிமென்ட்ரி ஆக்சிஸை பெற முடியும். அதேபோல, 7.2 கிலோ வாட் ஏசி கொண்ட வீட்டில் சார்ஜர் செய்யும் கருவிகள் இலவசமாக பொருத்தித் தரப்படும். அதேபோல், மின்சார வாகனத்திற்கு மாற நினைக்கும் டாடா வாகன உரிமையாளர்களுக்கு ரூ.20,000 வரை போனஸ் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவுக்கு போட்டியாக சலுகைகளை அறிவித்த டாடா
