நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா குறுக்கத்தி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த மேல்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதற்கு பக்கத்தில் தமிழ்நாடு அக்ரிகல்ச்சர் யூனிவர் சிட்டியும் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 150 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். இது NH65 சாலையில் பேருந்துகள் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றனர். ஏற்கனவே நிறைய விபத்துக்கள் ஏற்பட்டது. உயிர் இழப்புகளும் ஏற்பட்டது.


அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் ஆன அருண் தம்பராஜ் சார் அவர்களிடம் மனுவானது கொடுக்கப்பட்டு, ஸ்பீடு பிரேக் ஆனது போடப்பட்டது. மறுபடியும் புதிய தார் சாலை போடும்போது, அந்த ஸ்பீடு பிரேக் ஆனது அகற்றப்பட்டது. இப்போது ஸ்பீடு பிரேக் ஆனது, புதிதாக அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதற்கான சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேல் எந்த விபத்தும் நடக்காதபடி, ஸ்பீடு பிரேக் போட்டு தருமாறு மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் ஊர் மக்கள் சார்பாக, மாணவ, மாணவிகள் சார்பாகவும், ஆசிரியர் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றனர்.
