நாகையில் திருக்குறளை 11 மணி நேரத்தில் வேஷ்டியில் எழுதிய பட்டதாரி மாணவி உலக சாதனை படைத்துள்ளார். வெற்றிச் சான்றிதழ் பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்விஜயராணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி, இவரது மகள் விஜயராணி முதுகலை வணிக மேலாண்மைவியல் படித்து வருகிறார். இவர் திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக ஒரு வேஷ்டியில் 1330 திருக்குறள்களையும், 11 மணி நேரத்தில் எழுதியுள்ளார். இதனை அங்கீகரித்து கலாம் உலக சாதனை நிறுவனம் விஜய ராணிக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் விஜயராணி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளதால் அதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இந்த சாதனையை விஜயராணி செய்துள்ளதாக தெரிவித்தார்.

