தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல் திட்டத்தின்படி, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரையின்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி இரா.சுப்பையா தலைமையில் Anti Ragging குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் K.சத்தியபாமா, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.கலைகதிரவன், கல்லூரி துணை முதல்வர் P.விசாலாட்சி, வழக்கறிஞர்கள் T.குமார், M.ராம்பிரபாகர், பேராசிரியர் M.ராஜசுந்தரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் P.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ராக்கிங் குறித்தும் , அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் எடுத்துரைத்தார்கள்.
