சிறந்த கல்வி சேவைக்கா WISDOM AWARD 2022 என்கிற விருதினை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது.
ஆனந்த விகடன் பத்திரிக்கை குழுமம் சார்பாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு WISDOM AWARD 2022 என்கிற விருதினை மாண்புமிகு சபாநாயகர் அப்பாவு கரங்களால் வழங்கி சிறப்பு செய்தது. அதே போன்று 2024ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு PINNACLE AWARD 2025 மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கரங்களால் சிவகங்கை சாம்பகா பள்ளியின் தாளாளர் A.M.சேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
