தேமுதிக 25 ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன .
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர, ஓன்றிய தேமுதிக சார்பில் தேமுதிகவின் 25ம் ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் வேங்கட தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கழக தேர்தல் பிரிவு செயலாளர் ஆர். அழகர்சாமி கலந்துகொண்டு தேசிய முற்போக்கு திராவிட கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. அதே போல் திருப்புவனம் ஒன்றியம், மானாமதுரை ஒன்றியம், காளையார்கோவில் ஒன்றியம் பகுதிகளில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பைசூர் ரகுமான், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானமுத்து, சிவகங்கை நகர செயலாளர் தர்மராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் செல்லக்கண்ணு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பாலகுரு, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் வன்னிமுத்து, நகர அவைத் தலைவர் மாரிமுத்து, முத்து, நகரத் துணைச் செயலாளர் வேல்முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, திருப்புவனம் ஒன்றிய செயலாளர் காந்தி, இளையான்குடி ஒன்றிய செயலாளர் தர்மராஜ் பூவந்தி ஒன்றிய செயலாளர் செட்டிஅம்பலம் திருப்புவனம் நகர செயலாளர் அலாவுதீன், சிவகங்கை நகர துணை செயலாளர் வேல்முருகன், சிவகங்கை தெற்கு ஒன்றியம் முத்துசாமி மற்றும் கழக ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், சமூக வலைத்தளம் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
