கோவை மணியக்காரன் பகுதியில் உள்ள தோட்டத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தை, துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை, மாவட்டத்தில் கலந்து சில நாட்களாகவே பகல் வேளையில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. எந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மரங்களின் இலைகள் காய்ந்து உதிர்ந்து விழ ஆரம்பித்து உள்ளன.
இந்த ஆண்டு முன் கூட்டியே வெயில் காலம் தொடங்கி உள்ள சூழ்நிலையில் கோவை மணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள கே.பி.ஆர் திருமண மண்டபம் அருகில் இருக்கக் கூடிய தோட்டத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு காய்ந்து கிடந்த மரக்கிளைகள் மற்றும் பிழைகள் இருந்த பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்து உள்ளது நேரம் செல்ல செல்ல தீ மல மல என தோட்டத்தில் வேகமாக பரவ தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து உடனடியாக தோட்டத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவதை தடுத்து, தீ விபத்து ஏற்பட்டு உள்ள பகுதிகளில் ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீ முழுவதையும் அணைத்தனர்.





