• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவியோகி சுத்தானந்த பாரதி நூலக வாசகர் கூட்டம்

ByG.Suresh

Feb 9, 2025

சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட நூலக வாசகர் வட்ட கூட்டம் 9-2- 2025 அன்று மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி முன்னிலையில், நூலக வாசர் வட்ட தலைவர் அன்புத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. விழாவில் நூலகர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
நூலகவாசகர் வட்ட உறுப்பினர்கள், மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், எழுத்தாளர், நூலக நண்பர்கள், திட்ட உறுப்பினர் ஈஸ்வரன், நூலக நண்பர்கள், திட்ட ரமேஷ் கண்ணன் மற்றும் பகிரத நாச்சியப்பன், ஹேமா மாலினி
செல்லமணி. சேவுகன். சாஸ்தா சுந்தரம். சிவசங்கரி, திலகவதி, கருணாகரன். கோவிந்தன். கலந்து கொண்டனர் அதில் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள். கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வது, டிஎன்பிஎஸ்சி படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவது, .ஆர்வோ பிளான்ட் நிறுவுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் நூலகர் கனகராஜ் நன்றி கூறினார்.