• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா?டி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு…

ByP.Thangapandi

Feb 9, 2025

மக்கள் எதிரியாக பாஜக இருக்கிறது, மனித நன்மையில் அக்கறை இல்லாமல் மத பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போது இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா என்ற எண்ணம் தான் வருகிறது என உசிலம்பட்டியில் திமுக தலைமை செய்தி தொடர்புகுழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசிகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் – திமுக தலைமை செய்தி தொடர்புகுழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன்.,

மதுரையில் எய்ம்ஸ்க்கு செங்கலை நட்டு வைத்துவிட்டு சென்றார் மோடி, ஏன் கட்டவில்லை என்றால் ஜப்பனிலிருந்து பணம் வரவில்லை என சொல்கிறார்கள், ஆனால் அதற்கு பின் 7 இடங்களில் எய்ம்ஸ் கட்டி முடித்துவிட்டார்கள்.,

வேறு, வேறு மாநிலத்தில் எய்ம்ஸ் கட்டப்பட்டு விட்டது, தமிழ்நாட்டுக்காரன் தான் இழிச்ச வாயன் என நினைக்கிறார்களா?. ஏன் நாங்கள் பாஜக-வை எதிர்க்கிறோம், அக்கட்சி அடிப்படையிலேயே மனிதர்களை பிரித்தாலும் கட்சி என்பதால் தான்.,

நாமெல்லாம் சமத்துவமாக வாழ்ந்தவர்கள், நாம் சகோதரர்களாக வாழ்கிறோம், பாஜக வந்தால் குழப்பம் வந்துவிடும் என்பதால் தான் மக்கள் வேண்டாம் என்கிறார்கள்.,

இப்போது கூட திருப்பரங்குன்றத்தில் காலம், காலமாக இருக்கும் பழக்கத்தை யார் குழப்பத்தை உருவாக்கினார்கள், அதை இன்று தேவையில்லாமல் தூண்டி விட்டு திமுகவிற்கு அவ பெயர் உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.,

மேலும், சென்னையில் திமுக கொடியுடன், அதிமுகவினர் பெண்களை துரத்திய சம்பவம் அதே போல தான், எதையாவது சொல்லி இந்த கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த நிலைக்கிறார்கள். ஆனால் திமுக மக்கள் நலனே நம் நலன், மகளீர் நலனே நம்முடைய நலன் என்று பல்வேறு திட்டங்களை கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் உருவாக்கி தந்து கொண்டிருக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின்.,

ஒவ்வொரு திட்டத்தையும் எண்ணி செயல்பட்டு வரும் அரசை முடக்க வேண்டும் என எண்ணி இந்த அரசுக்கு மட்டும் பணம் தராத அரசாக மத்திய அரசு இருக்கிறது.

மக்கள் எதிரியாக பாஜக இருக்கிறது. மனித நன்மையில் அக்கறை இல்லாமல் மத பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போது இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா என்ற எண்ணம் தான் வருகிறது.

தனக்கு பிடிக்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்காதே, நம்மை ஏற்றுக் கொள்ளாத மாநிலத்திற்கு நிதி கொடுக்காதே என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

30 ஆயிரம் கோடி நமக்கு கொடுக்கவில்லை 69 ஆயிரம் கோடி இரண்டு பணக்கார்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளார்கள். மத்தியில் இரண்டு பேர் ஆட்சி செய்கிறார்கள் மோடி, அமித்ஷா. இல்லை பாஜக ஒரு ஆட்சி, ஆர்எஸ்எஸ் ஒரு ஆட்சி செய்கிறது.

ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வளர்க்கிறது, பாஜக இரண்டு பணக்காரர்கள் அதானி, அம்பானிக்கு புரோக்கர் வேலை பார்க்கிறது என பேசினார்.