விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாக்கியதாக, பெண் சார்பு ஆய்வாளர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை.
சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பிரமிதா என்ற சார்பு ஆய்வாளருக்கும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இளைய கௌதமன் என்பவருக்கும் புகார் மனு விசாரிப்பது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,இளைய கவுதமன் தன்னை தாக்கியதாக கூறி, சார்பு ஆய்வாளர் காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
6.2.25 SVG Police Complaint issues