பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக ரேஷன் கடைகளில் கடந்த 3-ம் தேதி டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. : சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை அருகில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை தொடக்கி வைத்தார்.