சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி, ஒரே வாரத்தில் இரண்டு முறை மின்தடை பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி, கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மின்தடை செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு வர வேண்டிய மின்சாரம் இரவு 8 மணி வரை வராத நிலையில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர். குறிப்பாக மருத்துவமனையில் மருத்துவர்கள் இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிற்ப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று 20 .12. 24 வெள்ளிக்கிழமை மீண்டும் சோழவந்தான் நகர் பகுதியில் பராமரிப்பு பணி என்று கூறி, மின்தடை செய்யப்பட்டுள்ளது. இது சோழவந்தான் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்..,

மாதாந்திர பராமரிப்பு செய்யும் போது என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என வரையறுத்து. அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத அளவில் மின்தடையை முறையாக செயல்படுத்தாமல் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின்தடை செய்யப்படுவதால் சோழவந்தானின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் சிறிதளவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை மூன்று நாட்களிலேயே அடுத்தடுத்து பராமரிப்பை காரணம் கூறி மின்தடை செய்யப்படுவது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடையே மின்சாரத் துறை அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் இனி வரும் காலங்களிலாவது முன்னறிவிப்பு செய்த பின்பு மின்தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மாற்று ஏற்பாடுகளை தயார் செய்து வைத்துக் கொள்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
