விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார்.
மதுரை மாவட்டம்விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுமூலப்பட்டி கிராமத்தில் கோட்டைச்சாமி என்பவர் வீட்டில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியதில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் அவரது ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் சத்திய பிரியாவின் நோட்புக் உள்ளிட்ட பள்ளி உபகரணங்கள் அனைத்தும் தீயில் கருகி முழுவதுமாக சேதம் அடைந்து அவரது கல்வி கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கோட்டைச்சாமி என்பவர் பாதிக்கப்பட்ட தனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனது மகளின் கல்வி பாதிக்கப்படாத அளவு கல்வி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் விபத்தில் சேதம் அடைந்த கோட்டைச்சாமியின் வீட்டிற்கு நேரில் வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் சேதமடைந்த வீட்டை சரி செய்யவும் கோட்டைச் சாமியின் மகள் சத்திய பிரியாவின் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூபாய் 20 ஆயிரம் உதவித்தொகையை உடனடியாக வழங்கினார். மேலும் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதிஅளித்து சென்றார்.
பின்னர் பேசிய கோட்டைச்சாமி தீவிபத்து ஏற்பட்டதை அறிந்தவுடன் நேரில் வந்து ஆறுதல் சொல்லியதுடன் சேதமடைந்த வீட்டை சரி செய்யவும் எனது மகளின் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும் உடனடி நிவாரண நிதி வழங்கிய இளமகிழன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள மதுரை தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் பிடி மோகன்
சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சி சுப்பிரமணியன் விவசாய அணி செயலாளர் மூக்கன் தகவல் தொழில் நுட்ப அணி விஜயன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.