• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மருதமலை முருகன் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!

BySeenu

Dec 14, 2024

கார்த்திகை தீபத் திருவிழா – பக்தர்களின் ஆரோகரா – ஆரோகரா கோஷம் முழங்க மருதமலை முருகன் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக திகழும் இக்கோவில் முருகப்பெருமானின் 7 – வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு பண்டிகை காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி பல்லக்கில் எழுந்தருளி, ஆலய உள்வலம் வருவார். அதைத் தொடர்ந்து மலைக் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை மாதம் முருகனுக்கு உரிய மாதம் என்பதாலும், மலைக் கோவிலில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்வது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்திற்கு சமமானது என்பதாலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மருதமலைக்கு, பாதயாத்திரையாக அரோகரா அரோகரா கோஷம் முழங்க வந்தும் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.