குமரி மருந்து வாழ் மலை அடிவாரத்தில் கலப்பை அமைப்பின் சார்பில் 208 விளக்குகள் ஏந்தி கார்த்திகை தீபம் மகளிரின் ஒளி ஊர்வலம்.
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மருந்துவாழ்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நயினார் சுவாமி தர்மசாலாவல் 208 பெண்கள் பங்கேற்ற தீபஒளி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்துக்கு திருவிளக்கு குழு தலைவி டி.எஸ்.பொன்செல்வி தலைமை வகித்தார்.மாநில மகளிரணி நிர்வாகி ஸ்ரீ ரெங்கநாயகி முன்னிலை வகித்தார். கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தீப ஒளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கு.ராஜகிருஷ்ணன் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் வர லெட்சுமி, அனிதா, புஷ்பலதா, தாணுலிங்கம், செந்தில் மோகன், ஆண்டிவிளை செல்வன், கணபதி, டாக்டர் நலம் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


இதைத்தொடர்ந்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: நாட்டில் வன்முறை, தீவிரவாதம் குறைந்து அன்பு, அமைதி ஏற்பட இந்தியாவில் இமயமலைக்கு நிகரான இயற்கை எழில் வாய்ந்த மருந்துவாழ்மலையில் அண்ணாமலையாரை வேண்டி 208 பெண்கள் கோஷம் எழுப்பி மகாதீப விளக்கு ஊர்வலம் மற்றும் பூஜை நடத்தியது மிகவும் சிறப்பானதாகும் என பேசினார்.
மருந்து வாழ் மலை உச்சியிலும் அந்த பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் துறவிகளும் கார்த்திகை தீபம் விளக்கு ஏற்றினார்கள்.









