• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது

Byவிஷா

Dec 11, 2024

நாளை டிச.12 பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் தேதியன்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே, லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது. இதில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக அதானி விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் பிரச்னை, நாடாளுமன்ற அவை முடக்கம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.