• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி மன்ற தலைவரின் ‘செக்’ பவர் பறிப்பு

ByJeisriRam

Nov 30, 2024

கனிமநிதி ரூ.60 லட்சம் அனுமதி இன்றி பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவரின் ‘செக்’ பவர் பறிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வளையப்பட்டி, மூன்று ஊர் ஊராட்சி பொது மக்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

தேனி மாவட்டம், போடி தாலுகா, மஞ்சிநாயக்கன் பட்டி ஊராட்சியில் கனிமநிதி ரூ.60 லட் சத்தை அனுமதி இன்றி அடிப்படை வசதிக்கான பணி செய்த ஊராட்சித் தலைவரின் ‘செக்’ பவர் நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

போடி தாலுகா, கெப்புரெங்கன்பட்டி, வளையப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி மூன்று ஊர் ஊராட்சித் தலைவர் வீரலட்சுமி. இவர் ஊராட்சிக்கான கனிம நிதி ரூ.60 லட் சத்தை முறையான அனு மதி இன்றி சாக்கடை தூர்வாருதல், பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார்.

கனிம நிதி செலவிட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பணிகள் செய்திட வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் செய்ததால் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி யது, அலுவலக நடை முறையை கடை பிடிக்காதது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக கூறி மஞ்சிநா யக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் வீரலட்சுமி ‘செக்’ பவர், வரவு,செலவு
கையாளுதல் உள்ளிட்ட பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட் டுள்ளார்.

ஊராட்சிக்கு மேலும் நிதி இழப்பு ஏற்படாத வகையில் இதற்கான பொறுப்பை போடி ஒன் றிய பி.டி.ஓ., (கி.ஊ.,) தனலட்சுமிக்கு அதிகாரம் வழங்கி கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஊராட்சி செயலாளர் முருகானந்தம் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.