சிவகங்கை நகராட்சியில் 300 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
சிவகங்கையில் 2 வீடுகளில் பாலிதீன் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்து
சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உத்தரவின் பேரில் , ஆணையாளர் உத்தரவின்படியும் சிவகங்கை நகர் பகுதிகளில் உள்ள தேநீர் கடை,பெட்டிக்கடை ஆகிய கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல்ஜப்பார், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2 வீடுகளில் இருந்து 300 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்த இருவருக்கு தலா ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்த பாலிதீன் பைகளை நகர் மன்ற தலைவர், ஆணையாளர், சுகாதார அலுவலர் முன்னிலையில் அழிக்கப்பட்டது…









