• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானம்

Byவிஷா

Nov 26, 2024

ஹைதராபாத்தில் இருந்து மதுரை புறப்பட்ட விமானம், மோசமான வானிலை காரணமாக மதுரை விமானநிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது அந்த விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை கருமேகங்கள் சூழ்ந்து உள்ளது காரணமாக வட்டமடித்த ஹைதராபாத்தில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ஹைதராபாத்தில் இருந்து காலை 6.40 புறப்பட்டு விமான நிலையத்திற்கு 8.10 மணியளவில் வந்தடையும். வானிலை ஆய்வு மையம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிருந்த நிலையில் மதுரையில் காலையில் மேகமூட்டத்துடன் இருப்பதாலும், கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாலும் ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வானில் வட்டமடித்தது.
10 நிமிடத்திற்கு மேல் வானிலை சரியாகும் வரை வானில் வட்டம் அடிக்கும் என்று இன்டிகோ தரப்பினரும் மதுரை விமான நிலைய அதிகாரிகளும் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது மேக கூட்டங்கள் மற்றும் கருமேகங்கள் விலகியதால் மதுரை விமான நிலையத்தில் 140 பயணிகளுடன் பத்திரமாக தரையறிங்கியது. பயணிகளுடன் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது அவ்விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.