• Sat. Jun 27th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரை விமர்சனம்!

Byஜெ.துரை

Nov 25, 2024

எம்.திருமலை தயாரித்து பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இத்திரைப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், பாதவா கோபி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சினிமா உதவி இயக்குனராக பணி புரியும் நாயகன் உமா சங்கர் (அசோக் செல்வன்) தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் நாயகி லியோ (அவந்திகா மிஸ்ரா) இருவரும் காதலர்கள் ஆவர்.

அசோக் செல்வன் தனது பெண் தோழிக்கு உதவி செய்யப் போய் தனது காதலுக்கு சிக்கல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

பிரிந்து சென்ற காதலியுடன் மீண்டும் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

காதல் மற்றும் காமெடி காட்சிகளில் தனது நடிப்பை இயல்பாக நடித்து பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளார் அசோக் செல்வன்.

நாயகனுக்கு இணையாக காதல், மற்றும் காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார் அவந்திகா மிஸ்ரா. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி சிறப்பாக நடித்துள்ளார்.

அசோக் செல்வன் அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள், மாமாவாக நடித்திருக்கும் படவா கோபி, டாக்டராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை அருமை. பாடல் காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா.

எந்த ஒரு ஆபாசமில்லாத காதல் கதையில் காமெடியும் கலந்து குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். மொத்தத்தில் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” ஒரு பொழுது போக்கு திரைப்படம்.