சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகமும், நூலக நண்பர்கள் திட்டமும் இணைந்து 57வது தேசிய நூலக வார விழா இன்று மாவட்டமைய நூலகத்தில் நடைபெற்றது. விழா தலைமை திருஞானசம்பந்தம் மாவட்ட நூலக அலுவலர் மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினராக சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் பங்கேற்று நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்த கண்காட்சியை திறந்து வைத்தும், புதிதாக நூலகத்தில் உறுப்பினராக இணைந்த மாணவ, மாணவியர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டையையும், புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் நூல் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் வழக்கறிஞர் அமுதன் நூலக நண்பர்கள் திட்டத்தைச் சார்ந்த தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் ஈஸ்வரன், ரமணவிகாஷ், முத்துகண்ணன் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மாவட்ட மைய நூலகர் .கனகராஜன் நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
