தமிழ் சட்டமன்றப் பேரவை பொதுகணக்கு குழு செல்வப்பெருந்தகை தலைமையில் குமரியில் ஆய்வு பணியில், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுகணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஷாநவாஸ், ஐயப்பன், சேகர், சந்திரன் ஆகியோரை கன்னியாகுமரி அரசு சுற்றுலா விடுதியில் குமரி ஆட்சியர் அழகு மீனா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.


தமிழக காங்கிரஸ் தலைவரும், தமிழ் நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழுவின் தலைவருமான செல்வப்பெருந்தகையை திமுகவின் சார்பில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, இளைஞர் அணி செயலாளர் மற்றும் திமுக கட்சியினர் உடன் இருந்தனர்.


தமிழ் நாடு சட்டப் பேரவை குழு தலைவர் செல்வப் பெருந்தகை, ஆட்சியர் அழகு மீனா,குழு உறுப்பினர்கள்,குமரியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், தாரகை கத்பட், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அரசு அதிகாரிகள் படகில் திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்று அங்கு இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் பரப்பில் அமைக்கப்படும் கண்ணாடி இழை பாலம் பணிகளை ஆய்வு செய்தனர்.


ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை தெரிவித்தது. 2022_ம் ஆண்டு அன்றைய குழுவில் வந்த உறுப்பினர் குழு . இரண்டு படகுகள் வாங்கி பல ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டில் ஏன் இல்லை என்று கேட்டோம். இன்றைய ஆய்வின் போதும், இன்று வரை அந்த இரண்டு படகுகள் பயன்படுத்தாது இருப்பது ஏன் ? என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். ஆய்வு முடிந்து சென்னை சென்றபின் எங்களின் பரிந்துரையை அரசிடம் தெரிவிப்போம்.

புத்தாயிரம் (2000) அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் திறந்து வைத்த திருவள்ளுவர் சிலை நிறுவிய 25 வது ஆண்டின் விழாவில். தமிழக முதல்வரோடு நாங்களும் பங்கேற்க உள்ளோம் என தெரிவித்தார்.