மேகமலை சுற்றுலா தளத்திற்கு செல்லக்கூடிய தென்பழனி மலையடி வாரத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதால் சாலைகளில் நிலச்சரிப்பு ஏற்படும் அபாயம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஹைவேஸ் பேரூராட்சி பகுதியில் மேகமலை, மகாராஜா மெட்டு, மணலாறு, அப்பர் மணலாறு, உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.
இங்கு தமிழக முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லக்கூடிய மேகமலை மலைப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே தென்பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலையடிவாரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கனிம வளங்கள் ஹிட்டாச்சி, ஜேசிபி, உள்ளிட்ட கனரக வாகனங்களை வைத்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இது மேகமலைக்கு செல்லக்கூடிய மலையை ஒட்டி கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதால் மேகமலைக்கு செல்லக்கூடிய சாலைகளிலும் மலைச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மேகமலை செல்லக்கூடிய சாலைகள் இருப்பதால் மலைப்பகுதியில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வருவாய் துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.