• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

ByKalamegam Viswanathan

Nov 4, 2024

அலங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி 2 வயது குழந்தை பலியாகின. புதைத்த குழந்தையை மீண்டும் தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை குழந்தை இறப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது30). செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி (28). என்ற மனைவியும் (5) மற்றும் (2) வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலையில் குழந்தை சுபாஷினி (2) வீட்டின் அருகே உள்ள தோட்ட பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளது. எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் குழந்தை தவறி விழுந்து விட்டது. இதைக் கண்ட தாய் சிவரஞ்சனி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு தனது குழந்தையை காப்பாற்றுமாறு கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து தந்தை பிரசாத் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து குழந்தையை மீட்டுள்ளனர்.

ஆனால் குழந்தை கிணற்றில் விழுந்த சிறிது நேரத்திலேயே மூச்சு திணறி இறந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசாருக்கும், வருவாய்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி , வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் நயினார் முகமது ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இறந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தை இறப்பு சம்மந்தமாக பெற்றோர்களிடமும் , அக்கம் பக்கத்தினரிடமும் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.