தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தேவேந்திர குல வேளாளர் அனைத்து சமூகத்தினர் சார்பாக கோவையில் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் இன்றளவும் தமிழக மக்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றவர்களில் தியாகி இம்மானுவேல் சேகரனார் கவனம் பெறுகிறார்.
இவரது நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்மானுவேல் சேகரனார் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாக கோவை இரயி்ல் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தமணிமாறன்,சுந்தர்ராஜ்,சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக,குறிச்சி மணிமாறன், அசோக், ராதா கிருஷ்ணன், லதா ராஜேந்திரன், உலக நாதன், புலியகுளம் விமல், ரவி, பேச்சி முத்து,
கலந்து கொண்டனர்.
முன்னதாக, தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தேவேந்திர குல வேளாளர் சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களது பங்களிப்பை வழங்கி வரும் சமூக களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
