மதுரை தெற்கு பகுதி குழு AITUC தொழிற்சங்கம் சார்பில் ஜீவா நகரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு AITUC பகுதி செயலாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்புரை – பா.காளிதாஸ் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் சேது – AITUC மாவட்ட செயலாளர் தாமாஸ் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர்
சுமதி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் சித்திக் – ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஜீவா – பகுதி குழு செயலாளர், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பழனி முருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பாலன், முனீஸ்வரி , முருகன், செல்வம், விஜயா, ஆனந்த், மணிகண்டன் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கோரிக்கை – கடுமையான விலை வாசி உயர்வை கட்டுப்படுத்திடவும், சிறு குறு தொழில்களை பாதுகாத்திடவும், மின் கட்டண உயர்வை குறைத்திடவும், நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் பண பயன்களை கால தாமதமின்றி வழங்கிடவும், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை உறுதி படுத்திடவும் வீடு இல்லாத அப்பள தொழிலாளர்களுக்கு இலவச வீடு, இடம் வழங்கிடவும் தீபாவளி பொங்கல் பண்டிகை காலங்களில் சிறப்பு போனஸ் வழங்கிடவும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
