நவராத்திரி கொலு விழாவிற்காக வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக மாற்றி கொலு படிகளில் ஆயிரக்கணக்கான பொம்மைகளைக் வைத்து 18 ஆண்டுகளாக மதுரை பார்க் டவுன் குருநாதன்-தேவசேனா தம்பதி நவராத்திரி கொலு கொண்டாடினர்.
மதுரை பார்க் டவுன் பகுதியில் வசிப்பவர் குருநாதன். தொழிலதிபரான இவரும் இவரது மனைவி தேவசேனாவும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக நவராத்திரியையொட்டி தங்கள் வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக தயார் செய்வார்கள். ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொலு படிகளில் அடுக்கி வைத்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த மூன்றாம் தேதி துவங்கி விஜயதசமி வரை ஒவ்வொரு நாளும் பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமாக பொங்கல் புளியோதரை கொழுக்கட்டை மற்றும் இதர சுண்டல் பிரசாதங்களை வழங்கி வருகிறார்கள். இந்த குருநாதன் தேவசேனா தம்பதியினர் மிக பிரமாண்;ட அளவில் கொலு அலங்காரம் வைத்துள்ளனர்.
தங்கள் வீட்டின் ஹாலில் வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக மாற்றியுள்ள தேவசேனா கூறுகையில், எனக்கு இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என அனைத்து மதத்தினரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். அவர்கள் நவராத்திரி நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்து கொலு அலங்காரத்தை பார்த்து பாராட்டிச் செல்கின்றனர்.
நாங்கள் அளிக்கும் பிரசாதங்களையும் அவர்கள் உவகையுடன் ஏற்றுச் செல்கிறார்கள். எம் மதமும் எங்களுக்கு சம்மதம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. எங்கள் வீட்டு கொலுவை பார்;த்து விட்டு செல்பவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறுதாகவும், குழந்தை வரம், திருமணம் வீடு கட்டுதல் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறுதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
இதனால் தங்களுக்கு மிகவும் மனநிறைவு ஏற்படுகிறது என்றும் திருமதி தேவசேனா தெரிவித்தார். அனைத்து வகையான கடவுள்களும் திருமண வைபவங்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது வளைகாப்பு நாதஸ்வரம் மேளம் மற்றும் கோவில் ஊர்வலம் போன்ற செட் பொம்மைகளும் அலங்காரத்தில் வைத்து நம் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் எடுத்துக்காட்டும் விதமாக கொலுவை அலங்கரித்து வைத்துள்ளார்.
