• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Oct 5, 2024

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹர்ஷிகா அருணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

கலைக்கூடம் பரதநாட்டிய அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கலா ப்ரதர்ஷினி இயக்குனர் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மதுரை விநாயகா பல் மருத்துவமனை நிறுவனர்களான மருத்துவர்கள் லாவண்யா, மதன் சுந்தர் ஆகியோரின் மகள் ஹர்சிகா அருணி, பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார்.

பதஞ்சலி முனிவரின் சம்பு நடனம், ராகமாலிகா ராகத்தில் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரம், ஹம்சத்வனி உள்ளிட்ட பல ராகங்களுக்கு சிறப்பாக பரதநாட்டியம் ஆடினார்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியான ஹர்சிகா அருணி, கலைக்கூடம் பரதநாட்டிய அகாடமி இயக்குனர் முருக சங்கரியிடம் 8 ஆண்டுகள் முறையாக பரதம் கற்றுக் கொண்டவர். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் நவராத்திரி திருவிழா, கூடலழகர் கோயில் புரட்டாசி திருவிழா, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வசந்த உற்சவம், மதுரை தமிழ் இசைச் சங்கம் உள்பட பல இடங்களிலும் பரதநாட்டியம் ஆடியுள்ளார்.