• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் WASTE TO ENERGY PLANT அமைப்பது குறித்து நிறுவன குழுவினர் ஆய்வு…

ByN.Ravi

Oct 4, 2024

இந்திய அரசாங்கம் City Investment to Innovate Integrate and Sustain 2.0 (CITIIS 2.0) திட்டத்தை 31 மே 2023 அன்று அங்கீகரித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அமைச்சகம் (MOHUA) French Development Agency (FDA), Kreditanstalt für Wiederaufbau (KfW), National Institute of Urban Affairs (NIUA) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 போட்டியில் 100 சீர்மிகு நகரங்கள் பங்கேற்றதில் இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்திய அரசு CITIIS 2.0 திட்டத்திற்காக மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. CITIIS 2.0 திட்டத்திற்காக மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் Waste to Energy component Plant பணிகள் மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளுவதற்கு ரூ.314 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவு வேண்டி இந்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
French Development Agency (FDA), Kreditanstalt für Wiederaufbau (KfW), National Institute of Urban Affairs (NIUA) ஆகிய மூன்று குழுவினர் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (03.10.2024) நடைபெற்றது. தொடர்ந்து அவனியாபுரம் வௌ;ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் Waste to Energy component Plant பணிகள் மேற்கொள்வது குறித்து நேரடியாக குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு 2028 ஆம் ஆண்டுற்குள் மதுரை மாநகரம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
இந்த ஆய்வின்போது மூன்று நிறுவனங்களின் குழுவினர், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவிப்
பொறியாளரகள் செல்வவிநாயகம், ரிச்சார்டு, செல்வி.சுபா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.