தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படும் முன் கடற்கரை பகுதியில் வைத்து பொது மக்களின் அஞ்சலிக்கு பின் அன்று கடலில் கரைக்கப்பட்டது. அந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரி கேரள அரசின் கீழ் இருந்தது.
அன்றைய கேரள மாநிலத்தின் முதல்வர் பட்டம்தாணுபிள்ளை. கன்னியாகுமரியில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்ட தீர்மானித்து, கேரள அரசின் பொதுப்பணித்துறை யின் தலைமை பொறியாளர் அலைக்ஸாண்டர் மூலம் நினைவு மண்டபத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கட்டிட கலையின் வடிவில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தில், சூரிய ரேகையின் பயணத்தை கணித்து அக்டோபர் 2-ம் நாள் சூரிய பயணிக்கும் ரேகையை கணித்து மண்டபத்தின் அஸ்தி கட்டத்தின் மேற் கூரை பகுதியில் இட்டு உள்ள தூவாரத்தின் பகுதி வழியாக சரியாக மதியம் 12-மணிக்கு சூரியனின் ஒளி அஸ்தி கட்டத்தில் பட்டு சில நெடிகளில் கடந்து போகும் வகையில், காந்தி நினைவு மண்டபம் கட்டிடத்தை உருவாக்கியிருந்தார்.

காந்தி மண்டபம் திறப்பு விழா கண்ட அந்த நாளில் குமரி மாவட்டம் கேரள அரசின் பகுதியில் இருந்து பிரிந்து தமிழகத்தின் பகுதியாகிவிட்டது.


தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_ வது பிறந்த தினமான இன்று. குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், சமூக நல ஆர்வலர் டாக்டர்.ராஜேந்திரன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்., அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, நாகர்கோவில் பெருநகர காங்கிரஸ் தலைவர் பிரவின், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தாமஸ், நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கவுன்சிலர்கள், கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகளும்,நினைவு மண்டபத்தில் தேசப்பிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், தேசப்பிதா பிறந்த நாள் அன்று மட்டுமே அஸ்தி கட்டத்தில் விழும் சூரிய ஒளி காட்சியை கண்டு வணங்கி மகிழ்ந்தார்கள்.

