திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த ராமசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வார். இந்நிலையில் 5 வாரங்கள் இப்பகுதியே திருவிழா கோலமாக காட்சியளிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே ராமர் மற்றும் லட்சுமணர் இலங்கையில் இருக்கும் சீதையை அழைத்து வர செல்வதற்காக வந்தபோது, இங்கு குடியில் அமைத்து தங்கியதாகவும் அப்போது இந்த கோவிலில் மண் பிடித்து சிலையாக உருவாக்கியது தற்போது இன்று வரை அப்படியே நிற்கும் இந்த ராமர் கோவில் சிலை இப்பகுதியில் அதிசயமாக கருதப்படுகிறது, இந்நிலையில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை இப்பகுதி என சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், திடீரென பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவிலுக்கு திடீர் வருகை தந்தார். தொடர்ந்து அவர் நரேந்திர மோடியின் பெயரில் அர்ச்சனை செய்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.