நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116_ வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குநர் பி. சி. அன்பழகன் பங்கு கொண்டார். அவரது பேச்சில் மக்கள் திலகம் எம்ஜிஆர்-யின் நூற்றாண்டு விழாவை அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி கொண்டாடிய, நாகர்கோவில் இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர்-யின் இதய தெய்வமான நம் அண்ணாவின் 116_பிறந்த தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை 2026_ம் ஆண்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியை அண்ணாவின் பிறந்த நாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோம் என தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம். கூட்டத்தினரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பி, சரியான பதில் சொல்பவர்களுக்கு ரூ.10,000.00 பரிசு என தெரிவித்தவர், கேட்ட கேள்வி.?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று எப்போது எங்கு வைத்து அண்ணா கூறினார். கூட்டத்தில் யாரும் பதில் சொல்லவில்லை.!? அவரது பேச்சில் குறிப்பிட்டார். குமரி வழியாக கேரளாவிற்கு தினம் 750_லாரிகளில் கனிமம் கொண்டு செல்கின்றனர் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கண்ணை இருக்க மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தாழக்குடி பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இரண்டு சமுகங்களின் இடையே ஒற்றுமை இன்மை ஏற்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் இருந்து 40_க்கும் அதிகமான பேர்கள் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது. அந்த மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது மூலம் வழக்குகளில் சிக்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளது.

ஒரு பிரச்சினை இருப்பதை காவல்துறை முன்கூட்டியே உணர்ந்து தகுந்த பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த சூழல் ஏற்பட்டிருக்காது. இது முழுக்க, முழுக்க காவல்துறையின் தோல்வி என தெரிவித்தார்.

நிகழ்வில் விழாவின் சிறப்பு பேச்சாளர் திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகனுக்கு, தளவாய் சுந்தரம் அண்ணா நினைவு பரிசை வழங்கினார்.
