தமிழகத்தின் 13 இடங்களில் இன்று வெயில் சுட்டெரிப்பு…
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்தனர். மதுரை நகரம் 104, நாகை, ஈரோடு, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி, புதுச்சேரியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, அதிராமபட்டினம், கடலூர், திருச்சியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
