நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோடு இரட்டைப்பை மைதானம் பகுதியில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையில்
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் விதமாக மூன்று லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வீர விநாயகருக்கு ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவினை தொடர்ந்து ஐந்து நாட்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பாஜக ஓ பி சி அணி மாவட்ட தலைவர் சி சுதாகர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








