• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை விளாச்சேரியில் ரூபாய் 30 முதல் 30,000 வரை மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனை..,

ByN.Ravi

Sep 3, 2024

மதுரை விளாச்சேரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சுமார் 40 கோடி அளவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, மதுரை விளாச்சேரி பகுதியில் பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் செய்து வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மட்பாண்ட பொருட்களில் விநாயகர் சிலை மற்றும் லட்சுமி, பார்வதி, சிவன் உள்ளிட்ட கொழு பொம்மைகளும் தயார் செய்யப்
படுகிறது.
நான்கு அங்குள்ள பிள்ளையார் முதல் 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வரை இப்பகுதியில் தயாராகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மதுரை மட்டுமல்ல விருதுநகர், தேனி, திண்டுக்கல் இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் கரூர் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலைகளில் உள்ள களிமண்களை சேகரித்து பதப்படுத்தி விநாயகர் பொம்மை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைக்கு மோல்டில் களிமண் அச்சு தயார் செய்யப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டு ரூ.30 அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, எட்டடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. விற்பனைக்கு இதில் கஜ (யானை) முக விநாயகர், நந்தி விநாயகர் சிம்ம விநாயகர் மூஷிக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது.
ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை ரூபாய் 3 ஆயித்திற்கு எட்டடி வியாபாரம் உயரம் உள்ள விநாயகர் 24 ஆயிரம் ரூபாய்க்கும் கஜமுகம் மற்றும் வாகனங்களில் உள்ள விநாயகர் செய்வதற்கு எட்டடி வீரத்திற்கு 30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்
பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து விளாச்சேரி பகுதியில் வந்து விநாயகர் சிலைகள் செய்து வாங்கி செல்கின்றனர். மேலும், நவீன காலத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைக்குள் பனைமர விதைகள் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் , வீடுகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை நீர் நிலையில் கரைக்கும் போது அங்கு கரைகளில் பனை மரங்கள் வளர உதவியாக இருக்கும் என, சமூக அக்
கறையோடும் சில விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, களிமண்ணால் செய்யப்படும் விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் நீர்வளம் பாதுகாக்கவும் முடியும் என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் பிஓபி எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குளம், கண்மாய்களில் கரைக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், நீர் மாசடைந்து நீரில் வாழும் மீன்கள் மற்றும் உயிரினங்கள் மிகவும் நீர்நிலைகளும் பாதிப்படைந்தது துர்நாற்றம் வீசியது.
இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பு ஏற்படுத்தியதை அடுத்து, அதை தண்ணீரில் கரைக்கவும் அதனால் நீர் வளம், நீர்வாழ் உயிரினம் மற்றும் மண் வளம் ஆகியவற்றை பாதுகாக்கவும் முடியும்.
தற்போது விளாச்சேரி பகுதியில் தயாராகி வரும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு பொது மக்களிடையே பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது மற்றும் விறுவிறுப்பாக விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.