அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில், சுசீந்திரம் பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் அந்த பகுதியில் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், பங்கேற்றனர்.
நிகழ்விற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய,பேரூர், வட்ட,கிளைகழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நமது கூட்டணி தலைவர் ஸ்டாலினின் கேட்டுக்கொண்டதின் மூலம் 40_தொகுதிகளிலும் மகாத்தான வெற்றியை பெற்றோம்.
2026_யில் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி மு க 200_இடங்களில் வெற்றியை ஈட்டும் வகையில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும் என்று நம் கழக தலைவரும், நாளைய எதிர்காலம் சின்னவரும் அறிவித்துள்ளார்கள். இருவரும் கழக உடன்பிறப்புகள் மத்தியில் வைத்துள்ள கோரிக்கையை திட்டம் இடவே ஒவ்வொரு பகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

சுசீந்திரம் அரங்கம் கூட்டத்தில் ஏராளமான தாய்மார்கள்,இளைஞர்கள் வந்துள்ளது நமது வெற்றியை கட்டியம் சொல்லும் நிகழ்வாக பார்க்கிறேன்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள வை உறுப்பினர் தம்பி விஜய் வசந்த் கடந்த சட்டமன்ற தேர்தலை விட கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி யில் அதிமுகாவை விட அதிகமாக 19,000 வாக்குகளும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக வை விட 7000_ம் வாக்குகளை பெற்றது மட்டும் அல்ல, குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தம்பி விஜய் வசந்த் அதிக வாக்குகள் பெற்று கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தளவாய் சுந்தரத்தையும், பாஜகவை சேர்ந்த எம்.ஆர். காந்தியை பின்னுக்கு தள்ளி உள்ளார்கள் குமரி மாவட்ட வாக்காளர்கள். இதே நிலையில் நமது சட்டமன்ற தேர்தலில் வெற்றியை காணும் வகையில் நம் பணிகள் அமைய வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தெரிவித்தார்.
