கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1000_ம் ஆண்டுகள் பழமையானது. இங்கு உள்ள கிணறு தூர் வாரும் பணி தொடங்கியது.
இந்தியாவின் தென் கோடி பகுதியான கன்னியாகுமரி. பரசுராமர் வீசிய கோடாலி விழுந்து நிலப்பரப்பு என்ற புகழுடன், திருமணத்தை மறுத்து கன்னிதெய்வமாக பகவதி அம்மன் கோயில் கொண்ட இடம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய என்ற ஒற்றை புகழ் சொல்லால். இந்தியாவில் உள்ள பன்முக கலாச்சாரம் சங்கமைக்கும் பகுதியான, இங்கு தான் இயற்கையின் அதிசயம் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியும், கடல் கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலின் பிரகார பகுதியில் வடக்கு பக்கம் அம்மனின் அபிஷக தீர்த்தத்திற்காக தோண்டப்பட்ட கிணற்றில் உப்பு தன்மை இல்லாத நல்ல தண்ணீர் ஊற்றெடுத்திருப்பது அன்றே அன்னை பகவதியின் அருள் ஆசியால் என்ற நம்பிக்கை அன்று வாழ்ந்த மக்களால் பக்தியோடு ஏற்பட்ட நம்பிக்கை. இந்த தண்ணீரால் தான் தினம் பகவதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.

அம்மன் சன்னதிக்கு முன் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்க ப்பாதை வழியாகத்தான் கோயில் மேல் சாந்திகள், இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அம்மனுக்காக அபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வருவதற்கான பாதை இருந்தது.
கடந்த 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த கிணறு பயன் பாட்டில் இல்லாது இருந்த போதும். கோவிலுக்கு வரும் பக்த்தர்களில் சிலர் அம்மனுக்காக காணிக்கையாக நாணயம், பணத்தாள், வெள்ளியிலான மற்றும் தங்கத்தால் நகைகளை காணிக்கையாக போட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த கிணறின் திறந்திருந்த பகுதி இரும்பு கம்பிகளால் ஆன வேலியால் முடப்பட்டது.
குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையிலான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாது மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கிணற்றினுள் பக்தர்கள் பல காலமாக செலுத்திய காணிக்கைகளில் பணத்தாள்கள் எத்தகைய நிலையில் இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில், நாணயங்கள், வெள்ளி, தங்கம் எவ்வளவு உள்ளது என்பதை ஆய்வு செய்யும் வகையில் இன்று காலை (செப்டம்பர்_1)ம் நாள், மிகப் பழமையான கிணற்றை தூர் வாரும் பணி தொடங்கியுள்ளது.
அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்,குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல், வார்ட் கவுன்சிலர் ஆட்லின், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.
தூர்வாரி வெளியே எடுக்கப்பட்ட குப்பை கலந்த சகதியுடன் இருந்த நாணயங்களை அடையாளம் கண்டு எடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
குமரி மாவட்ட மக்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக. சில ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலின் பூமிக்கு கீழே இருக்கும் பல அரைகளில் தங்கத்தால் ஆன பல சிலைகள், நகைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது போன்ற,தங்க குவியல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் கிணற்றில் கண்டெடுக்கப் படுமா.? என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி குறியை ஏற்படுத்தியுள்ளது.