• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்: வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் – செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

BySeenu

Aug 29, 2024

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் படையெடுக்க துவங்கியது. இதைத் தொடர்ந்து பருவ மழை கனமழையாக பெய்ததால் வறட்சி நிலை மாறியது, இருந்த போதும் மனிதர்களின் விளை நிலங்களில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளுக்குள் இருக்கும் உணவுப் பொருட்களை ருசித்து, சுவைத்து பழகிய அந்த யானைகள் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒவ்வொரு கிராமப் பகுதிகளுக்குள் உணவு தேடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வனத் துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலத்திற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுத்தும், மனிதர்களின் உயிர்களை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதியாக யானைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டும் வனத் துறையினர். அந்த யானைகள் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் அடுத்தடுத்த கிராமப் பகுதிகளுக்குள் செல்கிறது.

இந்நிலையில் கோவை, துடியலூர் அடுத்த வடவள்ளி – பன்னிமடை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் சாலையை கடந்து செல்கிறது, அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அதற்கு வழிவிட்டு நின்று யானைகள் செல்லும் காட்சியை அச்சத்துடன் பார்த்து கடந்து சென்றனர். அதில் ஒருவர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.