• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வணங்கிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயரும் ஆன மகேஷ்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத்திற்கு முன், தமிழக அமைச்சரவையிலும், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்று வரிசை கட்டிய கேஷியங்கள்….

தமிழக அமைச்சரவையில் புதிதாக மூன்று பேர் அமைச்சர்களாக பதவி பெறும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கல்த்தா பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் பதவி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, தமிழகம் முழுவதும் கூடுதலாக ஒவ்வொரு மாவட்டத்தையும் மூன்று திமுக மாவட்டங்களை உருவாக்கி சில பழைய மாவட்ட செயலாளர்கள் பதவி என்று முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெயிட் அன் சீ என புன்னகை முகத்துடன் ஒற்றை பதிலோடு முதல்வர் அமெரிக்கா புறப்பட்டு விட்டார்.

முதல்வரின் அமெரிக்கா பயணத்திற்கு நேரில் வாழ்த்து சொன்ன பலரின் ஒருவராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முதல்வருக்கு நேரில் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பும் வாய்ப்பை பெற்றவர்களில் ஒருவர்.