குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றே. குமரி ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்றபின் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் முதல் கூட்டத்தில் பரஸ்பர அறிமுகத்திற்கு பின் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தின் நிகழ்வுகளை ஒரு பார்வையாளர் நிலையில் மட்டுமே பங்கேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாய பெருமக்களும்,ஒரு பெண் ஆட்சியர் என்ற நிலையில் முழுமையான ஒரு உள் வாங்கலின் அணுகுமுறை என்றே அன்று கருதினோம்.
கடந்த (ஆகஸ்ட்_23) நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அரை மணி நேரம் மட்டுமே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாநில விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டு ஆட்சியர் நேரம் ஒதுக்கிய பின்னரும் ஆட்சியர் மாநில விவசாய சங்கத் தலைவரை சந்திக்காமல் அவமதித்ததார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் திருமதி அழகு மீனா பொறுப்பு ஏற்றார். மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களாலும் இம்மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற்றதாலும் நேற்று 23 -08-2024 காலை 10:30 மணிக்கு விவசாயிகள் கூட்டம் தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று 10:30 மணி அளவில் கூட்டம் தொடங்கிய பின்னரும் மாவட்ட ஆட்சியர் 11:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தவர், மீண்டும் அரை மணி நேரத்திலேயே கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக கூட்டத்தை நடத்த வேண்டிய மாவட்ட வருவாய் அலுவலரும் அதற்கு முன்பே கூட்டத்தில் இருந்து வெளியே சென்று விட்டார். சாதாரணமாக மாநில முதல்வர் மற்றும் கவர்னர் உட்பட முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மட்டும் மாவட்ட ஆட்சியர் கடந்த காலங்களில் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்ட போது கூட மீண்டும் இடையில் கலந்து கொண்டு நடத்துவது நடைமுறையாக இருந்தது. ஏனைய விழாக்கள் ஆனாலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்வது நடைமுறையாக இருந்தது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை தவிர்த்து கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே வேறு சிறு சாதாரண விழாக்களில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் சென்று விட்டார்.!? அதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முழுமையாக விவசாயிகள் குறைதீர்க்கும் அளவில் நடைபெறவில்லை என்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரும் இல்லாத நிலையில் ஏனைய அதிகாரிகளால் நடத்தப்பட்ட கூட்டம் ஏனோதானோ என்று ஒப்புக்கு எந்த வித தீர்வும் காணப்படாமல் நடத்தப்பட்டதாக உள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் மாநில விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக குமரி மாவட்டம் வந்ததாகவும் மாலை மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும் அதன்படி மாவட்ட ஆட்சியர் மாலை 6:30 மணி அளவில் நேரம் ஒதுக்கி இருந்ததாபோதும் அப்போது மாவட்ட ஆட்சியரை சந்திக்க மாநில தலைவர் பி ஆர் பாண்டியனுடன் மாவட்ட நீர் பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, மற்றும் புலவர் செல்லப்பா உட்பட விவசாய சங்க தலைவர்கள் மாலை 6:15 மணி முதல் 7.15 மணி வரை ஆட்சியரை சந்திக்க காத்து இருந்தும் சந்திக்க அனுமதிக்காமல் அவரது உதவியாளர்கள் மூலம் அலக்கழித்ததாகவும், அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதனால் மாநில விவசாய சங்கத் தலைவர் உட்பட விவசாய சங்கத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இயலாமல் திரும்பச் சென்று விட்டார். இதுகுறித்து பாசனத்துறை தலைவர் திருவின்ஸ் ஆன்றோ அவர்கள் மேலும் கூறியதாவது, மாதத்திற்கு ஒரு முறை வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயம் பொய்த்து போனால் உணவுக்கு நாம் கையேந்த வேண்டிய நிலை வரும். விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் நடத்தி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். இது சம்பந்தமாக நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டத்தில் தலைவராக இருந்து வழி நடத்த வேண்டியது மாவட்ட ஆட்சியர் ஆகும். அவர் ஏனைய அதிகாரிகள் குழுவுடன் கலந்துகொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமையாகும். ஆனால் மாவட்ட ஆட்சியரே விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் உள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளும் அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து செயல்படுவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மாலையில் மாநில விவசாய சங்க தலைவரை சந்திக்க அனுமதி அளித்துவிட்டு சந்திக்காமல் அவமானப்படுத்தியுள்ளார் என வேதனையுடன் தெரிவித்தார். ஒவ்வொரு மனிதருக்கும் விவசாயிகளால் தான் தாங்கள் வாழ்கிறோம் என்ற நிலையில் விவசாயிகளை மதிக்கும் மக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மதிக்காமல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்று விடுவது என்பது விவசாயிகளை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக குற்றச்சாட்டினார்.
கடந்த காலத்தில் விவசாயிகளை குறைதீர் கூட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்த பல்வேறு ஆட்சியர்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடக்க முதல் முடிவு வரை கலந்து கொண்டு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்தியதைப் போல தற்போதைய மாவட்ட ஆட்சியரும் முழு கரிசனையுடன் கலந்து கொண்டு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
நாஞ்சில் நாடு ஒரு முழுமையான விவசாய நிலங்கள் சார்ந்த பகுதிக்கு ஆட்சியர் அதன் பூகோள, புவியியல் நிலையை முதலில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
நாஞ்சில் நாட்டு விவசாயிகள் சார்பில் குமரி ஆட்சியருக்கு,
வான் புகழ் திருவள்ளுவர் எழுதிவைத்து போய் உள்ள
” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்ற குறளை நாஞ்சில் நாட்டு விவசாயிகள் சார்பில் நினைவு படுத்த விரும்புகிறோம் என தெரிவித்தார்.
விவசாய சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ கருத்துக்கு ஆட்சியர் அழகு மீனா ஒரு பதில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.