• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Nov 14, 2021

இந்திய மிருகக் காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, அமெரிக்கா போக ஆசை வந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்குப் போய் சேர்ந்தது.
அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது.

ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,
‘ஏய்… நான் இந்தியாவில் காட்டு ராஜா… அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க… ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே…’ என, மிரட்டலோடு கேட்டது.


அந்த ஊழியர், ‘உண்மை தான்… நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்… ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்… அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்…’ என்று கூறினார்.


இந்திய டாக்டர்கள் சொந்த நாட்டில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். ‘நீங்கள் அமெரிக்கா போய் குரங்காக இருப்பதை விட, இந்தியாவில் ராஜாவாக இருங்கள்’.