பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. இதைத் தொடர்ந்து இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னையில் உள்ள தா.பி.சத்திரம் மார்க்கெட் அருகில் நாளை (02.08.2024) வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெறம் என்றும் , இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் அலுவலக செயலாளர் ச.கல்பனா அறிவித்திருக்கிறார்.