“நண்பர்கள் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் நண்பர்கள் தினம் மிக, மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக இன்ஜினியர் சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார். நடிகர் ராமநாதபுரம் ராஜேந்திரன், உசிலம்பட்டி பாலா, மதுரை வீரா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா, கோவை மீனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள், தேனீர் வழங்கப் பட்டது.