தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக 28.07.24 அன்று மாலை சிவகங்கை அரண்மனை வாசலில் சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் மாவட்டப் பொருளாளர் முகமது இஸ்மாயில் தலைமையிலும் மாவட்ட துனைச் செயலாளர் தீன் & மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் வருசை முகமது முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் TNTJ பேச்சாளர் முகமது இஸ்மாயில் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுனார், மேலும் சிவகங்கை நகர் கிளை நிர்வாகிகள் ஹுமாயூன் கபூர், காதர், உமர், ராஜா, கனி, மன்சூர், அப்ரீத் & நஸ்ரூதின் அகியோர் உடன் இருந்தனார்.

தெருமுனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பட்ஜெட் அக்கிரமங்கள்
- சமீபத்தில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன, தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக பிஹார் மற்றும் ஆந்திராவுக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு, எந்த வித நியாய உணர்வுகளுக்கும் கட்டுப்படாமல் தமக்கு எதிராக வாக்களித்த மாநில மக்களை வதைக்கும் ஒன்றிய அரசு , மக்கள் சக்தியின் மகத்துவத்தை மேலும் உணர்ந்து கொள்வர், வரும் தேர்தல்களிலும் தொடர் தோல்விகளையே தழுவுவர் என்று இந்த தெருமுனைக் கூட்டம் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
நிர்வாக சீர்கேடுகள்
- நீட் வினாத்தாள் கசிந்தது, தொடர் ரயில் விபத்துகள், என மோடி ஆட்சியின் நிர்வாக சீர்கெடுகள் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கின்றன, இலட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் கனவுகளில் மண்ணள்ளி போட்டுள்ளதோடு, கடந்த சில மாதங்களில் நடந்துள்ள ரயில் விபத்துக்களில் நூற்றுக்கணக்கானோரின் உயிரையும் பறித்துள்ளது மோடி அரசு, இந்த நிர்வாக சீர்கேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சரும் , ரெயில்வே அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என இந்த தெருமுனைக் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்ரேலின் அடக்குமுறைகள்
- காஸா மண்ணில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை கடும் வேதனையேற்படுத்துகிறது அந்த மண்ணில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்த தெருமுனைக் கூட்டம்_வாயிலாக வலியுறுத்துகிறோம் , போரை நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டும் என இந்த தெருமுனைக் கூட்டம்வாயிலாக வலியுறுத்துகிறோம்
வெள்ளை அறிக்கை வெளியிடுக
- தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை இந்த தெருமுனைக் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்
இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக
- தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் ஏழு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசை இந்த தெருமுனைக் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்
போதை ஒழிப்பு நடவடிக்கைகள்
- இந்தியா முழுவதும் போதை பொருள்களின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை மட்டும் பார்க்காமல் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வருவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த தெருமுனைக் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
