கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காட்டேஜுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் கோட்டாட்சியர் சிவராம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ் உரிமையாளர் நிக்சன் மோசஸிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பல ஆண்டுகளாக அனுமதியின்றி காட்டேஜ் செயல்பட்டு வந்தது என தெரிய வந்ததை அடுத்து வருவாய்த் துறையினர் அந்த காட்டேஜை பூட்டி சீல் வைத்தனர்.